ஹிருணிக்கா தொடர்பில் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள கோரிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் தாய்மையை களங்கப்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணிலின் கோரிக்கை
மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிக்காவிற்கு இழிவுபடுத்தக் கூடிய வகையிலான புகைப்படங்களை வெளியிடுவதனை தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார்.
நாகரீகமான சமூகம் தாய்மையை இழிவுபடுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தன்னை முகம் சுளிக்கும் வகையில் கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஹிருணிகா |

அனைத்து விடயங்களை விடவும் தாய்மை மேலானது என்ற எண்ணக்கருவினை முதன்மைப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மற்றும் பயனர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம்
நேற்றைய தினம் பிரதமர் ரணிலுக்கு எதிர்ப்பை வெளியிட்டு அவரது இல்லத்திற்கு எதிரில் ஹிருணிக்கா உள்ளிட்டவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
| இன்றிலிருந்து மாற்றப்பட்டது பிரதமர் ரணிலின் பெயர்! கொழும்பில் அறிவிப்பு |
இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஹிருணிக்காவை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஹிருணிக்கா தமது இல்லத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தியமையானது அரசியல் ரீதியான ஓர் காரணியின் அடிப்படையில் என்பதனால் அதற்கு அரசியல் ரீதியாகவே பதிலளிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam