தன்னை முகம் சுளிக்கும் வகையில் கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஹிருணிகா
தனது மார்பகங்கள் குறித்து பெருமைப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சிலர் அவரது மார்பகங்களை கேலி செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தனது பேஸ்புக் பதிவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
"என் மார்பகங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்! நான் மூன்று அழகான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, என் முழு உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.
எப்படியும் நீங்கள் பேசி, மீம்ஸ் செய்து, என் மார்பகங்களைப் பற்றி சிரித்து முடித்ததும், வரிசையில் இன்னொரு குடிமகன் உயிரிழந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியும்!" என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கொழும்பில் போராட்டம்
ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் கொழும்பு கொள்ளுப்பிடி பகுதியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமரை சந்தித்து கடிதம் கையளிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சென்றிருந்தது போதிலும், பிரதமர் இல்லத்திற்கு போராட்டக்காரர்களை செல்லவிடாமல் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது ஹிருணிகா பிரேமச்சந்திரவுன் சென்ற சில பெண்கள் தடையை மீறி செல்ல முற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
