கொழும்பின் முக்கிய பகுதியில் பதற்றம்! வீதித்தடைகளை அகற்ற முயற்சி - விசேட அதிரடிப்படை குவிப்பு (Live)
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொழும்பு பிளவர் வீதியில் பொலிஸாரால் போடப்பட்டுள்ள வீதித் தடைகளை அகற்றும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள வீதி மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு பிளவர் வீதி பகுதியே இவ்வாறு பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டம்
இதேவேளை இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலைமையிலான பெண்கள் குழுவினரே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தாய்மாரின் போராட்டம் என்ற கருப்பொருளில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இந்த நிலையிலேயே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan