கைது செய்யப்பட்டுள்ள மகிந்த கஹந்தகம தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய குரல் பதிவு
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் நகரசபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம தொடர்பில் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரினால் கஹந்தகமவின் மகளுக்கு ஏற்படுத்திய தொலைபேசி உரையாடல் தொடர்பான குரல் பதிவே இவ்வாறு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
மகிந்த கஹந்தகமவின் மகளுக்கு குறித்த போதை பொருள் வர்த்தகர், அநாகரிகமாக திட்டி கொலை மிரட்டல் விடுவதாக அந்த குரல் பதிவு அமைந்துள்ளது.
சர்ச்சைக்குரிய குரல் பதிவு
உனது தந்தை என்னிடம் 500 கிராம் ஐஸ் போதை பொருளை பெற்றுக்கொண்டு மூன்று மாதங்களாக அதற்கான பணத்தை செலுத்தாமல் தவிர்த்து வருவதாகவும் பணத்தை செலுத்த தவறினால் துப்பாக்கி சூடு நடத்துவதாகவும், வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அந்த போதைப் பொருள் வர்த்தகர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதேவேளை இந்த தொலைபேசி உரையாடலில் இணைந்து கொள்ளும் மகிந்த கஹந்தகம பண மோசடி செய்யவில்லை எனவும் கொடுக்க வேண்டிய பணத்தை விரைவில் தருவதாகவும் கூறுகின்றார்.

காணி ஒன்றை விற்பனை செய்து நிலுவைப் பணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிலர் தங்களது காணியை பார்க்க வருவதாகவும் குறைந்த விலைக்கேனும் காணியை விற்பனை செய்து கடனை அடைப்பதாக மகிந்த கஹந்தகம கெஞ்சுவது தொலைபேசி உரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போதைப்பொருள் குற்றச்சாட்டில் மகிந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு பின்னணியில் போதை பொருள் வர்த்தகர் ஒருவர் மிரட்டுவதும் போதைப்பொருளை தான் கொள்வனவு செய்து பணம் செலுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்வதுமாக இந்த தொலைபேசி உரையாடல் பதிவாகியுள்ளதுடன், சமூக ஊடகங்களில் இந்த உரையாடல் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மகிந்த கஹந்தகம முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமானவர் என்பதுடன் அரகலய போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan