லசந்த விக்ரமதுங்க யாரென்று தெரியாத தமிழருக்கு CID செய்த கொடூரம்!
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மட்டுமன்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் திசைதிருப்புவதற்காக பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் மேலும் பல படுகொலைகள் அடங்கியுள்ளன என ரைன் விக்கிரமதுங்க எழுதிய "Unbowed and Unafraid' என்ற ஆங்கில நூலின் (அதாவது லசந்த விக்கிரமதுங்கவின் வாழ்க்கைச் சரிதை நூலின்) சிங்கள மொழிபெயர்பின் ஆசிரியர் கசுன் புஸ்ஸேவெல தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்,
படுகொலை செய்யப்பட்ட மூவர்
வவுனியாவைச் சேர்ந்த இரு இளைஞர்களின் படுகொலை மற்றும் அதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவர் புலனாய்வாளர்களிடம் குறிப்பிட்ட ஒரு மரத்தின் அடியில் சென்று பார்க்குமாறு கூறுகிறார்.
அப்படியானால் அவருக்கு அது எப்படித் தெரிந்திருக்கும்? ஆனால் அந்த இளைஞர்கள் இருவருக்கும் இதனுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும் லசந்தவின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் நுவரெலியாவைச் சேர்ந்த பிச்சை தேவதாசன் என்பவரின் பெயரிலேயே பெறப்பட்டுள்ளன.

அதாவது தனது அடையாள அட்டை தொலைந்து போய்விட்டது எனக் குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பொலிஸுக்கு வந்த CIDயினர் அந்தக் கடிதத்தைக் கூட எடுத்துச் சென்றுள்ளனர்.
அவர்கள் லசந்த விக்ரமதுங்க யார் என்றே தெரியாத மிகவும் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பிச்சை தேவதாசன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
அடையாள அட்டையை எடுத்ததாகக் கூறப்படும்
அன்றைய காலங்களில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தவர் ராஜபக்சக்களின் நெருங்கிய உறவினர். அப்படியானால் இந்த வழக்கு ஏன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றது என்பது தெளிவாக இல்லை.
அதன் பிறகு பிச்சை தேவதாசன் தனது அடையாள அட்டை தொலைந்துவிட்டது என்று கிராம சேவகருக்குக் கொடுத்த கடிதம் கூட காணாமல்போயுள்ளது. இதனால் தான் நிரபராதி என்று சமூகத்திற்குச் சொல்வதற்குக் கூட அந்த மனிதருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

பின்னர் அவர் சிறையில் இருக்கும்போதே இறந்து போகிறார். அவரது இறப்பும் ஒரு மர்மமாகும். அப்படியானால் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். அதன் பிறகு ஜெயமான்ன என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்.
அவர் சாட்சி வழங்கிவிட்டு இறந்துபோகிறார். லசந்தவைக் கொலை செய்தது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அல்ல என்று அவர்தான் கூறினார். அதுமட்டுமன்றி தேவதாசனின் அடையாள அட்டையை எடுத்ததாகக் கூறப்படும் கந்தகெதர பியவன்ச என்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரி காவலில் இருந்த காலத்தில் என கூறப்பட்டுள்ளது.
அவருக்கு புலனாய்வுச் சேவையினால் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால் இது எப்படி நடந்தது. லசந்த படுகொலை திசைதிருப்ப பல அநியாயங்கள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செம்மணி 540 : தமிழ்த் தேசியக் கட்சிகளின் அமைதியின் பின்னணி! 31 நிமிடங்கள் முன்
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri