ஞானசார -கோட்டாபய ராஜபக்ச உறவு:விக்டர் ஐவன் எழுதிவைத்திருந்த தகவல்கள்..

Gotabaya Rajapaksa Ministry of Defense Sri Lanka Galagoda Aththe Gnanasara Thero
By Kanthan Oct 05, 2026 12:13 PM GMT
Report

பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ச சில கடும்போக்குவாதச் சக்திகளுக்குப் பாலூட்டி வளர்த்ததோடு மட்டுமன்றி அச் சக்திகளுக்கு பாதுகாப்பும் அளித்தார்.

அதற்குச் சிறந்த உதாரணமாக 'பொது பல சேனா' அமைப்பைக் குறிப்பிடலாம் என காலஞ்சென்ற ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் எழுதி வைத்திருந்திருந்த தகவல்கள்கள் வெளியாகியுள்ளன. அதில் கோட்டாபய ராஜபக்ச - ஞானசார தேரருக்கிடையிலான தொடர்பை விவரித்துள்ளார்.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உரத்த குரலில் ஞானசார தேரர் கூறிய விடயம்..

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உரத்த குரலில் ஞானசார தேரர் கூறிய விடயம்..

பாதுகாப்பு அமைச்சு ஞானசார தேரருக்கு வழங்கிய தைரியம்

ஞானசார தேரரின் தைரியம் இயல்பான ஒன்றை விட பாதுகாப்பு அமைச்சின் பலத்தால் உருவாக்கப்பட்டதாகும். அந்தத் தேரரின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அப்போதைய பாதுகாப்புப் படையினர் அவர் விரும்புவதைச் செய்ய விட்டுப் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏனெனில் அவர்களுக்கிடையிலான அந்த மறைமுகத் தொடர்பை அனைவரும் அறிந்திருந்தனர்.ஹலால் பிரச்சினை எழுந்தபோது நாட்டில் அங்கீகாரம் பெற்ற முன்னணிப் தேரர்கள் அந்தப் பிரச்சினை தீவிரமடையாமல் அமைதியான முறையில் தீர்க்க முன்வந்தனர்.

அவ்வாறு வந்த தேரர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்டக் குழு இருந்ததாகவும் விக்டர் ஐவன் கூறியுள்ளார்.

இதனால் பல நடுநிலைமையான தேரர்கள் மௌனமானார்கள். அடுத்துஇ தர்கா நகரில் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகுதான் பேருவளை சம்பவம் நடந்தது. பேருவளை சம்பவத்திற்குப் பிறகு பொது பல சேனாவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி அறிவிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஞானசார தேரருக்கு அறிவித்ததாகத் ஐவன் எழுதுகிறார்.

ஞானசார -கோட்டாபய ராஜபக்ச உறவு:விக்டர் ஐவன் எழுதிவைத்திருந்த தகவல்கள்.. | Galagoda Aththe Gnanasara Gotabaya Rajapaksa

ஊடக நிறுவனம் ஒன்றின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளரைத் தொடர்பு கொண்டு ஒரு புலனாய்வுச் சேவையின் தலைவர் ஞானசார தேரரின் செய்தியாளர் மாநாட்டுக்கு ஊடகக் ஒளிபரப்புப் வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத சில நிமிடங்களிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நேரடியாகத் தொடர்பு கொண்டு ஞானசார தேரரின் செய்தியாளர் சந்திப்பிற்கு ஊடகக் ஒளிபரப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஞானசார தேரர் மீண்டும் மீண்டும் கூறியது தனது இயக்கத்திற்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதாகும். உண்மை வெளிப்பட்ட தருணத்தில் அதை மறைக்கச் செய்த முயற்சி இதில் தெளிவாகத் தெரிகிறது என்று விக்டர் ஐவன் எழுதுகிறார்.

ஏனெனில் ஊடகங்கள் வராதபோது ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துச் செல்லுமாறும் கோட்டாபயவே தொலைபேசியில் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். அக்காலத்தில் ஞானசார தேரரின் அறிக்கைகளைக் குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டிருந்தது.

ஆனால் அவை செய்யப்படவில்லை. உண்மையில் ICCPR என்பது இலங்கையில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும். ஆனால் உண்மையில் நடைமுறைப்படுத்த வேண்டிய இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த இரு தசாப்த காலத்தை எடுத்தாலும் இச்சட்டத்தைப் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. 

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுகள் தொடர்பில் அமெரிக்க அறிக்கையிலுள்ள அதிர்ச்சி தகவல்கள்..

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுகள் தொடர்பில் அமெரிக்க அறிக்கையிலுள்ள அதிர்ச்சி தகவல்கள்..

ஒருநிமிடம் பேச வாய்ப்பளியுங்கள் - நீதிமன்றில் கெஞ்சிய ஞானசார தேரர்! அதிரடியாக மறுத்த நீதிமன்றம்

ஒருநிமிடம் பேச வாய்ப்பளியுங்கள் - நீதிமன்றில் கெஞ்சிய ஞானசார தேரர்! அதிரடியாக மறுத்த நீதிமன்றம்

   

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US