அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு - அவசரமாக சவூதி புறப்பட்ட முக்கிய குழு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் செயல்முறையை ஆய்வு செய்ய, சிறப்பு பிரதிநிதிகள் குழு ஒன்று சவூதி அரேபியாவுக்கு புறப்பட்டுள்ளது.
இந்த குழு, நேற்று இரவு (05) நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தூதரக மட்டத்தில் தலையீடு
இந்த குழுவில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரபெரும, மற்றும் சட்ட ஆலோசகர் ஹஃபீல் ஃபாரிஸ் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக தற்போது வெளிநாட்டில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்ட ஆலோசகருமான ஃபஸீர் முஸ்தஃபாவும் இக்குழுவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாட்டின் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி, மேல்முறையீடு செய்வதற்கான அவசியமான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதே இக்குழுவின் நோக்கமாகும்.
மேலும், அனோஜனின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்காக, அரசாங்கம் தூதரக மட்டத்தில் தலையிடவும் திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri
3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை Cineulagam