இந்தியாவில் இருந்து நேபாளம் செல்லும் ரணில்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று (28) நேபாளம் (Nepal) செல்கிறார்.
அவர் தனது தனிப்பட்ட பயணமாக நேபாளம் வர உள்ளார் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் கிருஸ்ண பிரசாத் தகால் ( Krishna Prasad Dhakal) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக அவருக்கு தேவையான நெறிமுறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளார்
ரணில் விக்ரமசிங்க தமது பயணத்தின் ஒரு பகுதியாக லும்பினிக்கும் செல்லவுள்ளார். (சாக்கியமுனி புத்தரின் பிறப்பிடமாகவும், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு புனித இடமாகவும் விளங்கும் லும்பினிக்கு ஒவ்வொரு ஆண்டும் இலங்கையிலிருந்து பெருமளவான பௌத்த யாத்ரீகர்கள் செல்கின்றனர்)
இதனையடுத்து ரணில் ஜனவரி முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
முன்னதாக ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கும் இறுதி மரியாதையை செலுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 30 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
