ரணிலுக்கு பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நானே! ரவி கருணாநாயக்க இடித்துரைப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக நானே இருக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய தேசிய கட்சி
நாடாளுமன்றத்திலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் பெரும்பான்மையானவர்கள் என்னுடனே இருக்கின்றனர் என்பது ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் அனைவரும் தெரிந்த விடயம்.
எனினும், கட்சியில் இருக்கும் ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் இந்த கட்சியை இல்லாதொழிக்க இடமளிக்க முடியாது.
ஐக்கிய தேசிய கட்சி என்பது மக்களின் கட்சி. இதனை பாதுகாக்க வேண்டும். இதில் இருந்த பலர் தற்போது வெளியில் சென்றாலும் அவர்களை நாங்கள் மீண்டும் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும்.
அபிவிருத்தி திட்டங்கள்
ஒருசிலரின் தற்காலிக திருப்திக்காக இந்த கட்சியை பணயக்கைதியாக இடமளிக்க முடியாது.
எமது நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது ஐக்கிய தேசிய கட்சியாகும்.
அதனால் அந்த வேலைத்திட்டங்களை நாங்கள் மீண்டும் நாட்டில் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
