இரகசிய பாதை வழியாக நடந்து சென்று மக்களை சந்தித்த ஜனாதிபதி
நுவரெலியா - கோர்ட் லொட்ஜ் பெருந்தோட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(16) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது சுமார் 3.2 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஆசியாவின் சிறந்த இரகசிய பாதையான பீக்கோ ட்ரெயல் பாதை வழியாக நடந்து சென்று,கோர்ட் லொட்ஜ் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
பீக்கொ ட்ரெயல் என்பது இலங்கையின் மத்திய மலைநாடு வழியாக அமைந்துள்ள 300 கிலோ மீற்றர் கொண்ட மலையேற்ற பாதையாகும். இது ஆசியாவின் சிறந்த இரகசிய பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இரகசிய பாதை
இந்த பாதை கண்டியில் இருந்து ஆரம்பித்து ஹட்டன் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா ஊடாக ஹப்புத்தளை மற்றும் எல்ல பகுதிகளை சென்றடைகிறது.
பிரித்தானிய காலனித்துவ காலத்தில் பெரிய தோட்டங்களில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொண்டு செல்ல இந்த பாதை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நுவரெலியாவின் மலைகளை சூழவுள்ள சுற்றுலா வாய்ப்புகள் தொடர்பில் ஜனாதிபதி அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri