மியன்மார் நிலநடுக்கம்.! அரசாங்கத்திடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை
மியன்மாரில்(Myanmar) நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இராணுவம் உள்ளிட்ட மருத்துவக் குழுவொன்றை அங்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மியன்மாருக்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அங்கு வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை அனுப்புமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதாகவும் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
மியன்மார் நிலநடுக்கம்
குறித்த அறிக்கையில்,
"2015இல் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இராணுவக் குழுவை அனுப்பினோம். இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கைதான் உதவி செய்தது.
இன்று இந்தியா, தாய்லாந்து, மலேசியா, சீனா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் மியான்மாருக்கு உதவிகள் செய்துள்ளன.நாமும் நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம்.
இராணுவத்தின் தற்காலிக மருத்துவக் குழுவை மட்டும் மியன்மார் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்பது எனது ஆலோசனை. அவர்களுக்கு தேவையான மருந்துகளை கொழும்பில் சேகரித்து அனுப்பலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
