ட்ரம்பின் அதிரடி! இந்தியாவுக்கு 100 சதவீத பரஸ்பர வரி
பரஸ்பர வரிகளில் எந்த விலக்குகளும் இருக்காது என்றும், பரஸ்பர வரி கட்டண விவரத்தை அறிவிக்க டொனால்ட் ட்ரம்ப் தயராகி வருகிவதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் குறித்த பரஸ்பர வரி விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கனடா, மெக்சிகோ, நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டார்.
அமெரிக்க விடுதலை
இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க விடுதலை நாளான நாளை உள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது,
பரஸ்பர வரிகளில் எந்த விலக்குகளும் இருக்காது. பரஸ்பர வரி கட்டண விவரத்தை அறிவிக்க ட்ரம்ப் தயராகி வருகிறார்.
இதனை செயல்படுத்துவதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார்.
அமெரிக்க தயாரிப்பு
மேலும் அவர் மற்ற நாடுகள் அமெரிக்க தயாரிப்பு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி விவர பட்டியலையும் அவர் வெளியிடுவார்.
இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் 100 சதவீதம் வரி விதிப்பால் இரசாயனங்கள் துறை , உலோக பொருட்கள் துறை, நகைகள் துறை, மேலும் ஆட்டோமொபைல்கள் துறை , மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் துறை ஆகியவை பல மடங்கு விலை அதிகரிக்க கூடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
