சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி!ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவிப்பு
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பங்குதாரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
அனைத்து நிதி நிறுவனங்கள் மற்றும் கடனாளிகளுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடுமையான நிதி முகாமைத்துவம் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி
இலங்கைக்கான விரிவான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும், இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தினால் நடாத்தப்படும் விசேட செய்தியாளர் மாநாடு உள்ளூர் நேரப்படி நாளை காலை 08.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.