இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
இலங்கைக்கு கடன் வழங்கும் யோசனைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதன்படி இலங்கைக்கு சுமார் 2.9 பில்லியன் டொலர் கடன் உதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.
நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய செயற்குழுவின் அனுமதியை இலங்கை பெற்றது நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும்.
அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது. இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பெரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட அதன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்தது.
முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.


சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan