ரணிலின் திடீர் அரசியல் நகர்வு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டின் பின்னர் தயாசிறியை தொடர்பு கொண்ட ரணில் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆண்டு நிறைவு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆற்றிய உரை சிறப்பாக இருந்ததாகவும், அனைத்து துறைகளையும் உள்ளடக்கி சிறப்பாக உரையாற்றியதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் செயற்பாடு
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிளவுபட்டு சென்று, சஜித் பிரேமதாஸ தலைமையில் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தியை மீண்டும் கட்சியுடன் இணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசி அழைப்பின் பின்னணியில் அரசியல் செயற்பாடு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



