ரணிலின் பாதுகாப்பு தகவல்கள் கசிந்தது எப்படி: விசாரணைகளை ஆரம்பிக்கும் குற்றப்புலனாய்வு பிரிவினர்
அண்மையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பிலான பொலிஸ் உள்ளக தகவல்கள் கசிந்துள்ளமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுளார்.
இந்நிலையில். படுகொலை முயற்சி இடம்பெறலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என கடந்த சில நாட்களாக பல சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் பொலிஸ் உள்ளக தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
கைது செய்ய உத்தரவு
ஜனாதிபதி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போதோ நாட்டிற்கு திரும்பும் போதோ உரிய பொலிஸ் அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல் வழங்கப்படுவது வழமை.
எனினும் அந்த பொலிஸாருக்கு வழங்கப்படும் அவ்வாறான அறிவுறுத்தல்களை ஊடகங்களிற்கோ அல்லது தனிநபர்களிற்கோ அனுமதியின்றி வழங்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தகவல்களை கசிய விட்டவர்கள் பரப்பியவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
