ரணில் மீண்டும் நாட்டை ஆள வேண்டும்: ருவான் கூறும் காரணம்
"ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டை ஆள வேண்டும்" என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (21.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தினை கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அடுத்த வருடம் (2024) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக தெரிவு செய்வது நாட்டுக்கு முக்கியதுவம் வாய்ந்தது.
ரணில் நாட்டை ஆள வேண்டும்
நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்த வேண்டுமானால் தற்போதைய ஜனாதிபதி ஐந்தாண்டுகள் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்.
கொரோனாவுக்கு முன்பே பொருளாதார வீழ்ச்சியைக் ஜனாதிபதி விக்கிரமசிங்க கணித்தார்.
எவ்வாறாயினும், இலங்கை குறுகிய காலத்தில் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்துள்ளது. எனவே ரணில் மீண்டும் நாட்டை ஆள வேண்டும் என்று ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




