ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் யோசனை! சஜித் ஆதரவு
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் யோசனையை ஆதரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எனினும், தமது விருப்பத்துக்கேற்ப ஜனாதிபதித் தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கம் முயற்சிப்பது ஜனநாயக விரோதமான செயல் என இன்று (15.05.2023) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான குறிப்பிட்ட கால எல்லைக்கு முன் அதனை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான திட்டங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. தமது சுய விருப்பத்துக்கேற்ப அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது.
இவ்வாறான தேர்தல் வரைபுகளை அரசாங்கம் தயாரிக்குமானால் அது ஜனநாயக விரோதமான செயல். ஜனாதிபதியின் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வழிகாட்டலுக்கமைய ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிடுவது பாரிய தவறாகும்.
தேர்தல் வரைபு
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினர் தேர்தல் வரைபுகளை மாற்ற முயற்சிக்க கூடாது. எவ்வாறாயினும், இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் யோசனையை நாம் ஆதரிக்கிறோம். அதற்கான அங்கீகாரத்தை வழங்குகிறோம்.
ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான சட்டங்களை நிறுவ நாம் உதவுவோம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சவாலை ஏற்றுக்கொள்ள நாம் ஆயத்தமாக உள்ளோம். தேசிய கொள்கைகளை மையப்படுத்திய பயணத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இது தொடர்பான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிடாது ஜனாதிபதி உள்ளிட்ட அவரது குழு நேரடியாக மக்களை தெரியப்படுத்த வேண்டும். நாம் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவை வழங்கியுள்ளோம்.
எனினும், அரசாங்கத்தின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திக்கும் நடவடிக்கையை நாம் ஆதரவளிக்கவில்லை. இதனை அரசாங்கம் தவறாக புரிந்து கொள்ள கூடாது“ என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
