ரணில் மற்றும் சம்பந்தன் விரைவில் பேச்சுவார்த்தை: தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு
சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்துவார் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் பேச்சு நடத்துவார்.

சர்வகட்சி அரசாங்கம்
இதன்போது, சர்வகட்சி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு எந்த விதத்தில் அமையும் என்பது தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிவார்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது.
எனவே, நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இன்றியமையாதது'' எனவும் தெரிவித்துள்ளார்.
| சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம் |
| மகிந்தவின் பக்கத்தில் தொடர்புகளை பேணும் சாணக்கியன்: எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல் |
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri