ரணில் - நாமலுக்கு கிடைக்காத வாய்ப்பு அநுரவுக்கு.. அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த மனோகணேசன்

Anura Kumara Dissanayaka Mano Ganeshan Namal Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa
By Rakesh Sep 21, 2026 03:06 AM GMT
Report

தற்போதைய ஆட்சியாளர்கள், முறைமையை மாற்றுவோம் என்று கூறிவிட்டுத் தற்போது அதே முறைமையின் ஒரு பகுதியாக மாறிக் கொண்டிருக்கின்றனர் என மக்கள் கருதத் தொடங்கியுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும், "மக்கள் போராட்டம் என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சியினாலும் முன்னெடுக்கப்பட்டதல்ல. பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து அதனைச் செய்தனர்.

அந்த அரசியல் சூழல்தான் நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பு அநுரகுமார திஸாநாயக்கவுக்கே கிடைத்தது. சஜித் பிரேமதாஸ, ரணில் விக்ரமசிங்க அல்லது நாமல் ராஜபக்சவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உண்மையே. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்.. 

எனினும், அந்தப் போராட்டம் வெறுமனே ஆட்சியில் இருப்பவர்களை மாற்றுவதற்காக நடத்தப்படவில்லை. மாறாக, நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாக முறைமையில் ஆழமான மாற்றத்தை (முறைமை மாற்றம்) ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது.

ரணில் - நாமலுக்கு கிடைக்காத வாய்ப்பு அநுரவுக்கு.. அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த மனோகணேசன் | Ranil Sajith Namal But Anura Got Chance Mano

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற முடியாது என்பதையும், நாட்டின் பொருளாதாரச் சவால்களையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.

ஆனால், அதிகாரத்துக்கு வந்த பின்னர் மக்களுக்கு உண்மைக்கு மாறான விடயங்களைக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல், வன்முறை, பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவளிக்கின்றேன்.

ஜனாதிபதி நாட்டை நிர்வகிப்பதில் மிகப்பெரிய பொறுப்பைக் கொண்டுள்ளார். அவரை மாதத்துக்கு ஒருமுறை நாடாளுமன்றத்துக்கு அழைத்து நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ரணில் - நாமலுக்கு கிடைக்காத வாய்ப்பு அநுரவுக்கு.. அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த மனோகணேசன் | Ranil Sajith Namal But Anura Got Chance Mano

தேர்தல் காலத்திலும் மக்கள் சந்திப்புகளிலும் வெவ்வேறு இடங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசில் உள்ளவர்கள் ஒன்றாக அமர்ந்து மீளாய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் வெவ்வேறு அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிடாமல், ஒரே நிலைப்பாட்டையும் ஒரே குரலையும் கொண்டிருக்க வேண்டும்.

மக்கள் இன்னும் இந்த அரசின் மீது எதிர்பார்ப்புகளை வைத்துள்ள போதிலும், மக்கள் போராட்டத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் நடைமுறைச் செயற்பாடுகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் முறைமை மாற்றம் குறித்த மக்கள் நம்பிக்கை மேலும் கடுமையாகப் பாதிக்கப்படும்."  என்றார்.

22 ஆவது திருத்தத்தை எம் மக்கள் சக்தியால் தோற்கடிக்க வேண்டும் - அழைப்பு விடுத்த சஜித்

22 ஆவது திருத்தத்தை எம் மக்கள் சக்தியால் தோற்கடிக்க வேண்டும் - அழைப்பு விடுத்த சஜித்

இலஞ்சம் பெற்றமைக்காகவே நாமல் ராஜபக்ச கைது..! அரசு மீதான விமர்சனங்களுக்கு சுசில் ரணசிங்க பதிலடி

இலஞ்சம் பெற்றமைக்காகவே நாமல் ராஜபக்ச கைது..! அரசு மீதான விமர்சனங்களுக்கு சுசில் ரணசிங்க பதிலடி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US