திருமண நிகழ்வில் ஒன்றிணைந்த அரசியல் முக்கிய புள்ளிகள்! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

Colombo Ranil Wickremesinghe Sajith Premadasa Wedding
By Vethu Feb 02, 2026 08:00 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இரவு நடைபெற்றுள்ள நிலையில், அது அடுத்தக்கட்ட அரசியல் செயற்பாட்டுக்கான ஆரம்பம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக முறுகல் நிலையில் உள்ள ரணில் - சஜித்  ஆகியோரின் சுமுகமான கலந்துரையாடலின் போது, பல சாதகமான நிலைப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிலியந்தலையில் உள்ள ஒரு ஹோட்டலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரியவின் மகனின் திருமண நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது..

இலங்கையின் வரலாற்றில் முதன்முறை! அநுர அரசை மகிழ்ச்சிப்படுத்திய புலம்பெயர் இலங்கையர்கள்

இலங்கையின் வரலாற்றில் முதன்முறை! அநுர அரசை மகிழ்ச்சிப்படுத்திய புலம்பெயர் இலங்கையர்கள்

ரணில் - சஜித் சந்திப்பு

இதன்போது முன்னாள் ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுக்கு சென்ற சஜித், ரணில் விக்ரமசிங்க அமர்ந்திருந்த மேசைக்கு செல்வதற்கு முன்னர் மனுஷ நாணயக்கார மற்றும் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு அமர்ந்திருந்த மேசைக்கு சென்றுள்ளார்.

திருமண நிகழ்வில் ஒன்றிணைந்த அரசியல் முக்கிய புள்ளிகள்! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் | Ranil Sajith Meeting  

இதைக் கண்ட ரணில் விக்ரமசிங்க தனது இருக்கையில் இருந்து எழுந்து சஜித் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு சென்றுள்ளார்.

உங்கள் நண்பர்களுடன் பேசிவிட்டு அந்த மேசைக்கு வாருங்கள் என ரணில் சஜித்தை அணுகி நகைச்சுவையாக, அடுத்தக்கட்ட அரசியலை ஆரம்பித்துள்ளார்.

சஜித்திற்கு வரவேற்பு கொடுத்த ரணில் தரப்பு

இந்நிலையில் சக நண்பர்களின் ஆலோசனைக்கு அமைய, ரணிலிடம் சென்ற சஜித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, முன்னாள் அமைச்சர்  ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், திகாம்பரம், சாமர சம்பத் உள்ளிட்டவர்கள் அமர்ந்த மேசையில் இருந்தனர்.

திருமண நிகழ்வில் ஒன்றிணைந்த அரசியல் முக்கிய புள்ளிகள்! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் | Ranil Sajith Meeting  

சஜித்திற்கு வரவேற்பு கொடுத்த ரணில் தரப்பு, ஆசனம் ஒன்றை வழங்கி ரணிலுடன் கலந்துரையாடலுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இதன்போது ரணிலும் சஜித்தும் சுமார் ஒரு மணி நேரம் விவாதித்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் குழுவின் மற்ற உறுப்பினர்களும் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சில பிரச்சினைகளை எழுப்பி விவாதத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக பலமான எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றை அமைக்கும் முனைப்புகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில், ரணில் - சஜித் தரப்பின் சுமுகமான சந்திப்பு தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் பதிவாகும் தலைகீழ் மாற்றம் - நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

தங்கத்தின் விலையில் பதிவாகும் தலைகீழ் மாற்றம் - நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

ராஜபக்ஷவுக்கும் அநுரவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை - சஜித் அணி குற்றச்சாட்டு

ராஜபக்ஷவுக்கும் அநுரவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை - சஜித் அணி குற்றச்சாட்டு

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US