ரணில் - சஜித் அணிகள் இணைந்து செயற்பட முடிவு!
ஆரம்பப் பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் செயற்படுவதற்காகக் குழுவொன்றாகவோ அல்லது அதற்கு நிகரான பொறிமுறையாகவோ இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.
இணைந்து செயற்பட முடிவு
பொதுக் காரணிகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கடந்த வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பல கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.
அந்தக் கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய முன்வைக்கப்பட்ட காரணிகளைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது என்று அந்தக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியுடன் வெளிப்படையாக இணைந்து செயற்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வஜிர அபேவர்தன மேலும் கூறினார்.





அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
