எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்குபிட்டி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று(8) மேற்கொண்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது ஜஸ்போதைப்பொருளுடன் எரிபொருள் தாங்கி சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முத்துராஐவெல பகுதியில் இருந்து யாழிற்கு எரிபொருள் ஏற்றிவந்த எரிபொருள் தாங்கியினை யாழ். மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையாக சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து ஜஸ், கஞ்சா மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்திய நிலையில் சாரதி ஜஸ் மற்றும் கஞ்சா பயன்படுத்திய நிலையில் வாகனத்தை செலுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம்(9) சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கையில் சாவகச்சேரி பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri