ரணில் - சஜித் இணைந்தால் நாட்டுக்குப் பெரும் நன்மை கிடைக்கும்: சமிந்த விஜேசிறி தெரிவிப்பு
ரணில் - சஜித் தரப்புக்கள் இணைந்தால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை பிரதேசத்தில் நேற்று(6) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகத்தில் கிடைக்கும் வெற்றியை நாட்டுக்கான வெற்றியாக மேம்படுத்த வேண்டும்.எம்மால் உருவாக்கப்படுவதை யாராலும் தகர்த்துக் கொண்டு செல்ல முடியாது.அவ்வாறு தகர்த்தால் அது நாட்டின் நன்மைக்காகவே இருக்க வேண்டும்.
சட்ட நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் நினைத்தால் மீண்டும் நாடாளுமன்றம் செல்வதற்கான சூழலை உருவாக்க முடியும்.

அவர் இதற்கு முன்னர் நாடாளுமன்றம் சென்று பிரதமராகி பின்னர் ஜனாதிபதியானதன் பின்னர் ஊழல், மோசடிக்காரர்கள் பாதுகாக்கப்பட்டனர் என ஜே.வி.பி. குற்றம் சுமத்தியது. ஆனால், இன்று வரை அவற்றை நிரூபித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஜே.வி.பி. அரசு தவறியுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் இருந்த கோப்புக்கள் இன்று இல்லை. அதேவேளை, ரணில் நாடாளுமன்றம் செல்லக் கூடிய, அவரைச் சுற்றி பலமான சக்திகள் உருவாகக் கூடிய சூழலை இந்த அரசே உருவாக்கிக் கொடுத்தது.
சஜித்- ரணில் தரப்புக்கள்
மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரை மக்களே மீண்டும் தேடும் சூழல் ஏற்படுவதற்கு அரசின் செயற்பாடுகளே காரணம். எவ்வாறிருப்பினும் நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய இயலுமை சஜித், ரணில் தரப்புக்கள் இணைந்தால் மாத்திரமே சாத்தியமாகும்.

மகிந்த, கோட்டா, பசிலால் முடியாமல் போன, அநுர பொறுப்பேற்காத நாட்டை ரணில் பொறுப்பேற்றுக் கட்டியெழுப்பினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எனவே, அவரது அனுபவம், அறிவைப் பெற்ற சஜித், ஹர்ஷ, எரான், கபிர் உள்ளிட்ட குழுவினரால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். எவ்வாறிருப்பினும் அதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இடம்பெற வேண்டிய மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றம்... இனி எப்போது தெரியுமா? Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri