மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பதில்
நாட்டில் தேர்தல் தொடர்பான விடயத்தில் எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு வழங்கியுள்ள பதில் அறிக்கையிலேயே, இலங்கை அரசாங்கம், இதனை தெரிவித்துள்ளது.
13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் 2014 முதல் நடத்தப்படவில்லை என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்காகவே இந்த பதில் அனுப்பப்பட்டுள்ளது.
பெண்களின் பங்கேற்பு
2024 நவம்பரில், இலங்கை அதன் வரலாற்றில் மிகவும் உள்ளடக்கிய நாடாளுமன்றங்களில் ஒன்றை உருவாக்கியது என்றும், இதில் மலையக சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்கள் மற்றும் பார்வையற்ற ஒருவர் உட்பட பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
இருப்பினும், பிரதமர் உட்பட இரண்டு பெண் அமைச்சர்கள் மட்டுமே அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ளதை, ஜெனீவா மனித உரிமைகள் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருபத்தி இரண்டு பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது, பெண்களின் பங்கேற்பை 9.8 சதவீதமாக இரட்டிப்பாக்கியது.
எனினும், சராசரியான 22.1 சதவீதத்தை விடக் குறைவு என்று மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியிருந்தது.

சோரம் போன அரசியலை மீட்டெடுக்க விடுதலை புலிகளின் தலைவரின் பெயரை பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




