நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை
அனுபவம் வாய்ந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாவிடின் துன்ஹிந்த - பதுளை வீதியில் கவிழ்ந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனுபவம் தேவை
ஏற்கனவே பல தடவைகளாக இந்த அனுபவம் என்ற விடயத்தை ரணில் விக்ரமசிங்க, கோடிட்டு பிரசாரங்களில் பேசியுள்ளார்.
அந்த வகையிலேயே இன்றும் ரணிலின் கருத்து வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியில் (NPP) உள்ளவர்கள் புதிதாக களத்துக்கு வந்தவர்கள் என்றும் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு அனுபவம் தேவை என்பதே ரணிலின் கருத்தாக அமைந்துள்ளது.
எனினும், நாட்டை நிர்வகிப்பதற்கு தேவையான அணி தம்மிடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan