உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் வழங்கிய இரகசிய வாக்குமூலம்!
இலங்கையில் ஐ.எஸ். உடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் தீவிரவாதிகளுடன் ஒரு புலனாய்வு அமைப்பு தொடர்பில் இருந்தமையை ரணில் வெளிப்படுத்தியதாக பத்திரிகையாளர் தரிந்து ஜெயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிப்படுத்திய 13 பக்க அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் இதனை கூறியுள்ளார்.
சமூக ஊடக பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.
வவுணதீவு கொலை
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ரணில் இரகசியமாக வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் வெளியாகிய தகவல்களும், சில மர்மங்களும் இன்றுவரை விடைபெறாத ஒன்றாகவே காணப்படுகின்றன.
எனினும் தரிந்து இதன்போது கூறும் சில விடயங்கள் மற்றும், நேற்றையதினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்திய விடயங்கள் என்பன பல்வேறு கேள்விகளை வெளிப்படுத்துகின்றன.
2020 ஆம் ஆண்டு, ரணில் பிரதமராக இருந்த காலத்தில், வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டது குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தினர் முன்னதாக அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்யதிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டனர்.
எனினும் காலப்போக்கில் இடம்பெற்ற விசாரணையானது, அதனை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்திய சந்தேகங்களை எழுப்பியது.
இந்நிலையில் இது தொடர்பில் ரணில் வழங்கிய வாக்குமூலங்களில் புலனாய்வு துறைக்கும், சஹ்ரான் குழுவுக்கும் தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தியதாக பத்திரிகையாளர் தரிந்து ஜெயவர்தன சுட்டிக்காட்டுகின்றார்.
2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி விசாரணை ஆணையத்திடம், இந்தியா தாக்குதல் குறித்து மூன்று அல்லது நான்கு முறை தகவல் அளித்திருந்ததாக பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சுரேஷ் சலே - ரணில்
இந்த தாக்குதலின் முக்கிய சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சலே தொடர்பிலும் ரணில் சில கருத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தரிந்துவின் கருத்துக்கள் வெளிப்படுகின்றன.
"தனக்கு சுரேஷ் சலேவை நன்றாகத் தெரியும்.
மேலும், தெஹிவளை குண்டுவெடிப்பாளருக்கு இராணுவ உளவுத்துறையுடன் தொடர்புகள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறையால் தனக்கு தெரிவிக்கப்பட்டது” என ரணில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் அதே கேள்விகளைக் கேட்கின்றன?
தாக்குதல்களை உண்மையில் திட்டமிட்டது யார்? குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்த பல உளவுத்துறை எச்சரிக்கைகள் ஏன் புறக்கணிக்கப்பட்டன? அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலும் பாதுகாப்பிலும் யாரும் ஏன் பொறுப்பேற்கவில்லை? ஜனாதிபதி விசாரணை ஆணையம் (PCoI) மற்றும் பல நீதிமன்ற நடவடிக்கைகள் உட்பட ஏராளமான விசாரணைகள் இருந்தபோதிலும், முக்கிய குற்றவாளிகள், வசதி செய்பவர்கள் மற்றும் அரசியல் ரீதியாக உதவுபவர்கள் சட்ட அமைப்பால் ஏன் தொடப்படாமல் உள்ளனர்? என்ற கேள்விகளே தொடர்கின்றன.
பெரிய வலையமைப்பு
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சில செயல்பாட்டாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டாலும், பெரிய வலையமைப்பும், முன்னறிவிப்புகள் இருந்தபோதிலும் துயரத்தைத் தடுக்கத் தவறியவர்களும் பெரும்பாலும் விசாரணை அல்லது தண்டனையிலிருந்து தப்பித்துள்ளனர் என்றே கூறவேண்டும்.
மறுப்பக்கம் இந்த தாக்குதல், ராஜபக்ச குடும்பத்தை அரசியல் ரீதியாக மீண்டும் எழுச்சி பெற பயன்படுத்தப்பட்டதா? எனவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை, அவை முழுமையாக விசாரிக்கப்படவில்லை.
ஜனாதிபதி ஆணையத்தின் முழு கண்டுபிடிப்புகளையும் வெளியிடுதல் மற்றும் அதன் பரிந்துரைகளின்படி செயல்படுதல் அவசியம் என கூறப்படுகிறது.
இல்லையென்றால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான தண்டனை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும், மேலும் அரசியல் தோல்வி மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்ள குற்றவாளிகளுக்கு வழியமைக்கும்.
இற்றிலையிலேயே இதுவரைக்காலமும் மறைக்கப்பட்ட சமர்ப்பிக்கப்படாத ஆவனங்களை தற்போது சிஐடியிடம் தாம் ஒப்படைத்துள்ளதாக அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ச்சியான தாமதம் பாதிக்கப்பட்டவர்களின் வலியை ஆழப்படுத்துவது மட்டுமல்லாமல், ஜனநாயக நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பலவீனப்படுத்துகிறது.
இவ்வளவு பெரிய, தடுக்கக்கூடிய துயரச் சம்பவம் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்தால், சாதாரன வழக்குகளில் நீதி கிடைப்பதற்கான நம்பிக்கை இல்லாமலே போய்விடும்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
