தலிபான்களின் அங்கீகாரம் குறித்து அரசாங்கத்திடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களை அங்கீகரிக்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கான இலங்கைத் தூதரகத்தை மூடி விடுமாறும் அவர் கோரியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் ஜிஹாதிய மற்றும் அல்காய்தா போன்ற தீவிரவாதிகளின் களமாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் காணப்படும் தூதரகத்தை மூடிவிட்டு பிராந்திய வலயத்தில் வேறும் ஓர் நாட்டில் தூதரகமொன்றை திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த போது அது பயங்கரவாதிகளின் மையமாக மாறியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் புதிய நிர்வாகத்துடன் தொடர்பு பேணப்பட்டால் இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடும் என ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.