அரசாங்க உறுப்பினர்களுக்கு ரணில் விடுத்துள்ள பணிப்புரை
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு, பிரசன்னம் தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மே தினக் கூட்டத்தின் பின்னர் தேர்தலை கருத்திற் கொண்டு அரசியல் பணிகளை முடுக்கிவிட ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நேரடியாக இலக்காகக் கொண்டு அரசியல் வேலைகளைத் தொடங்குவதற்கான ஊஞ்சல் பலகையாக இந்த ஆண்டு பேரணியை மிகப் பெரிய அளவில் நடத்த ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டுள்ளது.
கூட்டங்களை நடத்தும் பணி
தற்போது, நாடு முழுவதும் தொழில்முறை குழுக்களுடன் கூட்டங்களை நடத்தும் பணியில் அந்தக்கட்சி ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து கொள்ளவுள்ள பரந்த கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் பங்கேற்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
