ஷேக் ஹசீனா செய்த பெரும் தவறு : ரணில் சுட்டிக்காட்டு
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina), முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவை நீண்ட காலத்திற்கு முன்பே சிறையிலிருந்து விடுவித்திருந்தால், இன்னும் நாட்டின் பிரதமராக இருந்திருப்பார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
நிதி நெருக்கடி
எனினும் தற்போது காலிதா ஷியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாக ரணில் கூறினார்.
இதற்கிடையில், நிதி நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவ முன்வந்ததால், தற்போது நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனாவுக்கு ரணில் விக்ரமசிங்க தமது நன்றிகளை தெரிவித்தார்.
இலங்கைக்கு உண்மையில் பணம் தேவைப்படும்போது அவர் 200 மில்லியன் டொலர்களை வழங்கியதால், அவரை, தாம் இன்னும் நினைவில் வைத்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை பங்களாதேஷில் அமைதி நிலவும் என்று நம்புவோம் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |