சர்வதேசத்தின் கண்களில் மண்ணைத் தூவும் செயற்பாடே ரணிலின் கைது
சர்வதேசத்தின் கண்களில் மண்ணைத் தூவவும், தமிழருக்கான நீதியை மறுப்பதற்கும் ஒரு முன்னேற்பாடான செயற்பாடாகவே முன்னாள் ஜனாதிபதி ரணிலை கைது செய்துள்ளதாகத் தோன்றுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைக்குள் தள்ளி வழக்கு தொடுத்திருப்பது
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "சட்டம், நீதி அனைவருக்கும் சமம். பதவி, தகுதி, சமூக நிலை பார்க்கப்பட மாட்டாது.
குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு சட்டத்திற்கேற்ப தண்டிக்கப்படுவார்கள். இதில் நாம் பின்வாங்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க தேசிய பிக்குகள் பேரவை கூட்டத்தில் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் போர்க்குற்ற விசாரணை நடைபெறும் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே கூறி இருந்தமையை நினைக்கும் போது சட்டம் நீதி தொடர்பில் அவரின் இரட்டை நாக்கு நிலைப்பாட்டையும், அரசியல் சித்து விளையாட்டையும் வெளிபடுத்துகின்றது.
மனுதர்ம சட்டத்தின் படி இதுவும் குற்றமே. இதுவும் தண்டிக்கப்பட வேண்டியதே.
அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மக்கள் பணம் சூறையாடல் தண்டனைக்குரிய குற்றமாக தேசிய மக்கள் சக்தியினர் தினம் தினம் பாராயணம் பாடுவது கேட்கின்றது. அதன் ஓர் அங்கமாக முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து சிறைச்சாலைக்குள் தள்ளி வழக்கு தொடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.
ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரை
அதேபோன்று வடக்கில் தையிட்டில் அமைந்துள்ள தீர்த்த விகாரையும் அதிகார துஸ்பிரயோகம், மக்களுக்கு இடையிலே சமய முரண்பாடு தோற்றுவித்தல் என்பதை அடையாளப்படுத்துகின்றது.
ஆனால் அது தொடர்பில் இதுவரையில் ஜனாதிபதி எந்த வகையிலும் ஆக்க பூர்வமான சட்ட ரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பது ஏன் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்காகவா அல்லது சட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள் படையினர் என்பதற்காகவா? இந்த இரட்டை நிலைப்பாட்டிலிருந்து ஜனாதிபதி வெளிவரல் வேண்டும். தேசிய மக்கள் சக்தி மாற்றத்தினை உறுதிப்படுத்தலும் வேண்டும்.
நாட்டின் சட்ட துறையும் நீதியும் தகுதி, பதவி நிலை பாராது செயற்படுகின்றது எனக்கூறி இலங்கை நாட்டை பிணை எடுக்கவும் குற்றமிழைத்த பாதுகாப்பு படையினருக்கு எதிராக உள் நாட்டு விசாரணை நடாத்த சந்தர்ப்பம் தாருங்கள் எம் மீது நம்பிக்கை வையுங்கள் எனக் கூறவே அவசர அவசரமாக ரணிலின் கதை நடைபெற்றதோ எனவும் சந்தேகம் கொள்கின்றோம்.
ஏனெனில் இக் கைது ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரை அண்மித்தே நடந்துள்ளது.
மேலும் ரணில் வெளிநாட்டில் செலவழித்த அரச பணம் மிக சொற்பமே. அதற்கு தண்டனை கொடுப்பது அநீதியானது. ஆனால் பட்டலந்த வதை முகாம், மத்திய வங்கி பணமோசடி தொடர்பில் வழக்கு தொடருங்கள் நாம் அதற்கு ஆதரவளிப்போம் எனக் கூறி ஏழை மக்களை வீதியில் இறக்க ஒன்று கூடிய அரசியல் போர் குற்றங்கள் தொடர்பில் தமிழர்கள் கேட்கும் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிப்பார்களா?
அத்தகைய குரல் எங்கும் எழவில்லை எழப்போவதுமில்லை.ஏனெனில் ஒன்று வர்க்க அரசியல்.இன்னொன்று சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
