ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளியாக மாறும் ரணில் தரப்பு
ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளியாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றதை எடுத்துக்காட்டியே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் தமது பங்காளிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் ஏனைய கட்சிகளுடனும் தமது கட்சி பேச்சு நடத்தும் என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த பல தேர்தலிலும் தனித்துப்போட்டியிட்டு வந்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தோல்வியின் பாதையில் சென்றதை அடுத்தே ஒன்றிணையும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும் இந்த கூட்டணியின் தலைமை தொடர்பில் இன்னும் இறுதி அறிவிப்பு வெளியாகவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam