ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல் - படுக்கை அறையில் மகள் கண்ட அதிர்ச்சி
இத்தாலியில் வயதான பெண்ணை பராமரித்து வந்த 63 வயதுடைய இலங்கையர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
2009 முதல் இத்தாலியின் Padua நகரில் வசித்து வரும் சந்தேக நபர் முதியவரின் வீட்டில் தங்கி பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த வன்கொடுமை சம்பவம் நடந்துள்ள நிலையில் வழக்கு தொடர்பான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
முதியவரின் மகள், தனது கையடக்க தொலைபேசி செயலி மூலம் வீட்டில் உள்ள கண்காணிப்பு கமராவை சோதித்த போது, தாயின் அறையில் தகாத முறையில் செயற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் கமராவின் மைக்ரோபோன் ஊடாக என் தாயை விட்டு உடனே தள்ளிப் போகுமாறு கத்தியுள்ளார்.
மகளின் எச்சரிக்கை குரலைக் கேட்டு இலங்கையர் விலகியதால், பாரிய குற்றச்செயல் தடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த உடனேயே மகள் தாயின் வீட்டுக்கு சென்று சந்தேக நபரான ஊழியரை உடனடியாகப் பணியில் இருந்து நீக்கியதுடன் பொலிஸில் முறைப்பாடுசெய்துள்ளார்.
எனினும் சந்தேக நபரான இலங்கையர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். கமராவில் பதிவாகியிருப்பது தான் இல்லை என்று அவர் வாதிட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கைகள்
ஆனால், மகள் சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் தாயின் மருத்துவப் அறிக்கைகள் இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.

அரசு வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான விசாரணையைத் தொடங்கக் கோரியுள்ளார்.
தமக்கு இத்தாலிய மொழி தொழில்நுட்ப ரீதியாக முழுமையாகப் புரியவில்லை என்பதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு கோரியது.
ஆனால், அவர் 2009 முதல் இத்தாலியக் குடும்பங்களுடன் பணிபுரிந்து வருவதால் அவருக்கு மொழி தெரியும் என்று கூறி நீதிமன்றம் அதை நிராகரித்தது. எனினும் நீதிமன்றத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளர் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் இந்த வழக்கின் அடுத்தகட்ட முடிவு மற்றும் விசாரணை குறித்த தீர்ப்பை நீதிபதி இலையுதிர்காலத்தில் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.