விசாரணைகளை துரிதப்படுத்தவே சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடித்தேன் : ஜனாதிபதி

Ranil Wickremesinghe Easter Attack Sri Lanka
By Independent Writer Jun 02, 2024 11:15 AM GMT
Report
Courtesy: Sanukshan

இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பேராயர் இல்லத்துடனான தொடர்பாடல் குழுவில் சட்டமாதிபர் முக்கிய பங்கை வகிப்பதனால் அவரின் சேவை காலத்தை நீடிக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

2019ஆம் ஆண்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை ஆயர்கள் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை துரிதப்படுத்தவே சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடித்தேன் : ஜனாதிபதி | Ranil Reveals Extended Tenure Of Law Chancellor

இந்த பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய ஹொல்ட் என்டனி பெரேரா மற்றும் குருநாகல் ஆயர் ஆகியோருடன் தொடர்புகொள்வதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் ஆகிய மூவர்கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

பதவிக்காலம் நீடிப்பு குறித்து சந்தேகங்கள்

இந்த இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. எனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நிறைவடையும் வரை சட்டமாதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.இதன் அடிப்படையிலேயே பதவி காலத்தை நீடித்தேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை துரிதப்படுத்தவே சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடித்தேன் : ஜனாதிபதி | Ranil Reveals Extended Tenure Of Law Chancellor

புதிய சட்டமா அதிபர் ஒருவரை நியமிந்தால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும்.

அப்போதுதான் அவருக்குதெளிவு கிடைக்கும். இதற்கு நீண்ட காலங்கள் எடுக்கலாம் ஆகவே உயிர்த்த ஞாயிறு குறித்த விசாரணைகள் துரிதமாக நிறைவு செய்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதுவே எனது நோக்கமாக உள்ளது.

எனவே சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலம் நீடிப்பு குறித்து யாருக்காவது சந்தேகங்கள் இருந்தால் இலங்கை ஆயர்கள் பேரவையிடம் கேட்டு அறியலாம் என்று குறிப்பிட்டார்.

ரணிலிற்கு பசில் வழங்கிய காலக்கெடு - கொதிநிலைக்குள் கொழும்பின் அரசியல்

ரணிலிற்கு பசில் வழங்கிய காலக்கெடு - கொதிநிலைக்குள் கொழும்பின் அரசியல்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை: கல்வி அமைச்சின் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை: கல்வி அமைச்சின் அறிவிப்பு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW 


12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US