யாழில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் ஜனாதிபதியால் விடுவிப்பு
யாழ் - வலிகாமம் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டன.
குறித்த காணி விடுவிக்கும் நிகழ்வானது, இன்று ( 22.03.2024) யாழ் - அச்சுவேலி வயாவிளான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிராம சேவையாளர் பிரிவு
இதன்போது, ஜே - 244 வயாவிளான் கிழக்கு, ஜே - 245 வயாவிளான் மேற்கு, ஜே - 252 பலாலி தெற்கு, ஜே - 254 பலாலி வடக்கு, ஜே - 253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் இலவசமாக 2 மில்லியன் காணி உறுதிகளை வழங்குவதற்கான உறுமய தேசிய
வேலைத்திட்டத்தின் கீழ், 408 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும்
நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் ஒட்டகப்புலத்தில்
நடைபெற்றுள்ளது.










ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
