நாடாளுமன்ற அமர்வுகளுக்காக வீணடிக்கப்பட்ட 45 மில்லியன் ரூபா
45 மில்லியன் ரூபா செலவில் சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மூன்று நாள் விவாதம் வீணானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு இவ்வாறான பெரும் தொகை வீணடிக்கப்பட்டமையை சகித்துக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

அதிகாரம் இல்லை
இருப்பினும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பான முன்மொழிவுகளை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ தனக்கு அதிகாரம் இல்லை எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரசியலமைப்பு பேரவை தீர்மானமற்ற முறையில் செயற்பட்டால் அது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri