வவுனியா வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் இன்று (22.03.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்
வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
தனது குடும்பத்தை பிரிந்து தாயாருடன் வசித்து வந்த இவர் இவ்வியாபார நிலையத்திலேயே தங்கி இருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam