கொழும்பில் பிரமாண்ட அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் திறந்து வைப்பு
கொழும்பு - காலி முகத்திடலிலுக்கு (colombo galle face) அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (25.4.2024) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் ஐடிசி ஹோட்டல் குழுமத்தால் கட்டப்பட்ட முதல் சொகுசு ஹோட்டல் இதுவாகும்.
55 மீற்றர் நீள வான் பாலம்
இந்த ஹோட்டல் ''வெல்கம் ஹோட்டல்ஸ் லங்கா'' என்ற துணை நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதற்காக 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில் முதல் கட்டிடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும் இரண்டாவது கட்டடம் 50 அடுக்குமாடி குடியிருப்புமாக உள்ளது.
மேலும், தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் வகையில் 55 மீற்றர் நீளமான ஸ்கை ப்ரிட்ஜ் எனப்படும் வான் பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சம் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
