ஈரான் தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் பிராந்தியத்தில் மிகவும் முக்கியமானதொரு விஜயம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பிராந்திய வல்லரசுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இலங்கையின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் விஜயம்
எனினும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஈரான் இலங்கைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுவதால் அது இலங்கையர்களுக்கு நல்ல விடயமாக பார்க்கப்படுகின்றது.
எனினும் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தனது 3 நாள் பாகிஸ்தானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்த போது அமெரிக்காவின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானுடன் நட்புறவு
சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் விடயங்களில் அமெரிக்கா மிகவும் தன்னிச்சையான முடிவுகளையே எடுக்கின்றது.
எனினும் ஈரான் ஜனாதிபதி இலங்கை வருவதற்கு முன்னர் பாகிஸ்தான் சென்று வந்தததால் பாகிஸ்தானுடன் நட்புறவு ஏற்பட்டு அது இஸ்ரேலுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்ற நிலையிலேயே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதாக கருதப்படுகிறது.
அதனால் இலங்கை பாதிக்கும் என்பதற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் டியூடர் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |