இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகளின் செயற்பாடுகளை உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
விரைவு ரயில் பயணங்களின் போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிதிபலகையில் பயணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் உயிராபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக மலையகத்திற்கான ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளே இவ்வாறு செயற்படுகின்றனர்.
ஆபத்தான பயணம்
சுற்றுலாப் பயணிகள் தங்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் ஃபுட் போர்டில் ஏறி செல்ஃபி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், அண்மைக்காலமாக பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டடுகின்றனர்.
அண்மையில் ஒஹியா ரயில் நிலையத்திற்கு அருகில் பொடி மினிகே எக்ஸ்பிரஸில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் கீழே விழுந்தார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இந்த ஆபத்தான பயணத்தை தடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |