ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில் விக்ரமசிங்க: செய்திகளின் தொகுப்பு
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக்கட்சி நிச்சயம் களமிறக்கும் அவரை பின்வாங்க வைக்க இடமளிக்கமாட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. சர்வதேச ஆதரவை பெற்ற நபரும் அவர் தான். நாட்டின் நெருக்கடி நிலைமையைக் கையாளும் அனுபவம் அவருக்கே உள்ளது. இது மக்களின் மனசாட்சிக்கு தெரியும்.
எனவே, போலிகளை நம்ப வேண்டாம். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கான அழுத்தங்களை நாம் தொடர்ச்சியாக விடுப்போம். அவர் கட்டாயம் களமிறங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
இது தொடர்பான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
