திருகோணமலையில் இலங்கை தமிழரசுக் கட்சி உயர்மட்டக் குழுக் கூட்டம் (Video)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டம் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைப் பணிமனையில் நடைபெற்றுள்ளது.
உயர்மட்டக் குழுக் கூட்டமானது இன்று (18.12.2023) மாவை. சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திருகோணமலையில் எதிர்வரும் (2024.01.28) ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய 17 ஆவது தேசிய மாநாடு தொடர்பிலும் அதையொட்டி நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஏற்பாட்டுக் குழு
அத்துடன் மாநாட்டிற்கான முன் ஆயத்தங்களைச் செய்வதற்கும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் எஸ்..குகதாசன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட ஏற்பாட்டுக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், இ.சாணக்கியன், க.கலையரசன் தமிழரசுக் கட்சியின் பதில்.செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம்.
மற்றும் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனக சபாபதி, திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் எஸ்..குகதாசன், செயலாளர் க.செல்வராசா, துணைத்தலைவர் வி.விஜயகுமார், துணைச் செயலாளர் இ.இரட்ணசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

காசாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்: ஹமாஸ் அழியும் வரை போர் நிறுத்தம் இல்லை - செய்திகளின் தொகுப்பு


