ரணில் நாடாளுமன்றத்திற்கு வருவது அவசியமானது! பிரதமர் மஹிந்த
எதிர்க்கட்சியை வழிநடத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் பொருத்தமானவர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவே தகுதியானவர் எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு மீண்டும் வருவாராக இருந்தால் அரசியல் ரீதியில் அரசாங்கத்திற்கு சவாலாக அமையும். எனினும், அவர் நாடாளுமன்றத்திற்கு வருவது அவசியமானது எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஒரு வலுவான எதிர்தரப்பு எப்போதும் தேவை. எனினும் தற்போதைய எதிர்கட்சி பயனற்றது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதுள்ள எதிர்கட்சிக்குள் காணப்படுகின்ற முரண்பாடு ஜனநாயகத்திற்கு பாதிப்பாக அமையும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வலுவான எதிர்கட்சியொன்று இருக்கும் போது, அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சரியான ஆட்சி முறையொன்றை கொண்டு செல்வதுடன், சவால் விடுக்கவும் முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
