ரணில் – மைத்திரி சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
நேற்றையதினம்(13.02.2025) கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இங்கு தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நட்பு ரீதியான கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாபா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, உதய கம்மன்பில, நிமால் லன்சா, ராஜித சேனாரட்ன, ருவான் விஜேவர்தன, சாகல ரட்நாயக்க உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை எனவும், நட்பு ரீதியான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |