ரணில் - மைத்திரிக்கு இடையில் சந்திப்பு..
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு மால் வீதியில் அமைந்துள்ள செயல்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள்
கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் அதிகாரத்தை நிலைநாட்டுவது தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையிலேயே, குறித்த கலந்துரையாடல்கள், வெற்றி பெற்றுள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்த போதிலும், பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வெற்றி பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு கூட உறுப்பினர்களின் பெயர்கள் வழங்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
