மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்தான் : ஜே.வி.பி சாடல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கதான் என்பது உறுதியாகியுள்ளது என ஜே.வி.பியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
"மொட்டுக் கட்சி ரணிலைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் என்பது உறுதியாகியுள்ளது. பசில் ராஜபக்ஷ ரணிலை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். ராஜபக்ச உள்ளிட்ட திருடர்களைப் பாதுகாப்பதற்காக ராஜபக்ச குடும்பத்தால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர்தான் ரணில்.

முடிவுக்கு வரும் கனவு
அவர் அந்தப் பணியைச் சரியாகச் செய்து வருவதால் அவரையே மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள்.
அவர்களின் கனவு இந்த ஜனாதிபதித் தேர்தலுடன் முடிவுக்கு வரும்." - என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam