ரணிலே எங்களது தலைவர்:மகிந்தானந்த அளுத்கமகே கூறியதன் அர்த்தம் என்ன?
தற்போது தமது தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போது, எதிர்க்கட்சியினர் குறுக்கீடுகளை செய்தனர்.
தான் ஒரு கேள்வியை கேட்க முடியுமா என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்டார்.
அப்போது பதிலளித்த மகிந்தானந்த அளுத்கமகே,
“ இல்லை, உங்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க கூறினால் சந்தர்ப்பம் வழங்கப்படும். ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்குமாறு கூறினால், அனுமதி வழங்குவோம். தற்போது அவர்தான் எங்களது தலைவர்” எனக் கூறினார்.
எதிர்வரும் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்து தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
மகிந்தானந்த அளுத்கமகே கேலியாக இதனை முன்கூட்டியே உறுதிப்படுத்தினாலும் உண்மையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அப்படியான தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதை எதிர்காலத்தில் அனைவரும் காண முடியும் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.