மோடியைப் போன்றவர் ரணில்! டயானா புகழாரம்
இந்தியாவில் நரேந்திர மோடி(Narendra Modi) எப்படியோ அதுபோலவே இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe). இவ்விருவருமே தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வார்கள் என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage) தெரிவித்தார்.
ரணில் நிச்சயம் வெல்வார்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
சவாலான சூழ்நிலையிலேயே இந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். அவர் இதற்கு முன்னர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால் இந்த நாடு சிறந்த நிலையில் இருந்திருக்கும். அதனை அவர் தனது செயல் மூலம் நிரூபித்துள்ளார்.

இந்தியாவில் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு இடம்பெற்று வருகின்றது. அந்தத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் மீண்டும் பிரதமர் ஆவார். அவர் இந்தியாவை நேசிக்கின்றார்.
இந்தியாவில் நரேந்திர மோடி போல்தான் இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார். அவர் நிச்சயம் ஜனாதிபதியாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam