ரணில் அரசு விரைவில் கவிழும்: மைத்திரி உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் ஆயுள் விரைவில் முடிவடையபோகின்றது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆயுள் விரைவில் முடியும்

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
"இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அதன் ஆயுள் விரைவில் முடியப்போகின்றது.தேர்தல் ஒன்றின் ஊடாகவே ஆயுள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
தற்போதைய அரசுக்கு நிலையான பயணம் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேசிய பேரவை

இதே வழியில் பயணித்தால் தேசிய உற்பத்தி முழுமையாக இல்லாமல் போகும். போராட்டம் வேறு வடிவில் வெடிக்கும். மாணவர்கள் கூட வீதிக்கு இறங்குவார்கள்.
இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பேரவையில் அங்கம் வகிக்காது."என கூறியுள்ளார்.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam