2023 ஆம் ஆண்டு ஐ. தே.கட்சி ஆட்சியை கைப்பற்றும்
எதிர்வரும் 2023ஆம் ஆண்டளவில் பலமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் அமைக்கப்படும் என அந்த கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்கத்தின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
பலமிக்க அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான அடிப்படைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட முக்கியஸ்தர்களும், எதிரணியினரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தை அமைப்பது என்பது சிலருக்கு பிரச்சினையாக இருக்கலாம்.
கட்சியினர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிடடுள்ளார்.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam